முகப்பு

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 20 ஆகஸ்ட்

 

PostHeaderIcon ஶ்ரீ ராமர்

 

PostHeaderIcon இன்றைய படம் 20-08-2016

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 19 ஆகஸ்ட்

 

PostHeaderIcon ஶ்ரீ கிருஷ்ணர்

 

PostHeaderIcon இன்றைய படம் 19-08-2016

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 18 ஆகஸ்ட்

 

 

PostHeaderIcon ஶ்ரீ பலராமரின் அவதார தினம் (18-08-2016)

பலராமர் அவதாரம்

(இன்றஶ்ரீ பலராமரின் அவதார தினம்)தேவகி மற்றும் வசுதேவரின் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கம்சன் கொலை செய்தான். தேவகி ஏழாவது முறையாக கர்ப்பவதியான போது கிருஷ்ணரின் வியாபகமான அனந்தர் தேவகியின் கர்ப்பத்தில் தோன்றினார். தேவகி மிகுந்த மகிழ்ச்சியும், அதே சமயத்தில் வியாகுலமும் அடைந்தாள். அதே சமயம் குழந்தை பிறந்ததும் கம்சன் அதைக் கொன்று விடுவானோ என்பதில் வருத்தம்.

யோகமாயை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பிரதான சக்தியாகும். அவருக்கு பல்வேறு சக்திகள் உண்டென்றுவேதங்கள் கூறுகின்றன. "பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே" பல்வேறான சக்திகள் உள்ளும் புறமுமாக இயங்குகின்றன. எல்லா சக்திகளுக்கும் தலையாயது யோகமாயை எனும் சக்தி. எக்காலமும் அலங்கரிக்கப்பட்டிருப்பதும் அழகிய பசுக்கள் நிறைந்ததுமான விரஜபூமியில், விருந்தாவனத்தில் தோன்றுமாறு ஶ்ரீ கிருஷ்ணர் யோகமாயைக்கு கட்டளையிட்டார். விருந்தாவனத்தில் நந்தமகாராஜாவும் யசோதா ராணியும் வசித்த இல்லத்தில் வசுதேவரின் மனைவியருள் ஒருத்தியான ரோகிணி வசித்து வந்தாள். ரோகிணி மட்டுமின்றி, யதுகுல வம்சத்தைச் சேர்ந்த பலர் கம்சனின் கொடுமைகளுக்கு அஞ்சி நாட்டின் பல பாகங்களில் சிதறிப்போயிருந்தனர். அவர்களில் சிலர் மலைக் குகைகளிலும் கூட வசித்தார்கள்.பிரபுவான கிருஷ்ணர் யோகமாயைக்கு இவ்வாறு கூறினார் : "தற்போது கமசனின் சிறையில் தேவகியும் வசுதேவரும் உள்ளனர். தேவகியின் கர்ப்பத்தில் என் முழு வியாபகமான சேஷன் இருக்கிறான். சேஷனை நீ தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வாயாக. இதன் பிறகு நான் எனது முழு சக்தியுடன் தேவகியின் கர்ப்பத்தில் தோன்றப் போகிறேன். அப்போது நான் தேவகி மற்றும் வசுதேவரின் மகனாகத் தோன்றுவேன். நீ விருந்தாவனத்தில் நந்தனுக்கும் யசோதைக்கும் மகளாகப் பிறப்பாயாக."

தனது வெளிப்பாடான அனந்தர் தேவகியின் கர்ப்பத்தில் இருந்ததை கிருஷ்ணர் யோகமாயைக்கு கூறினார். தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு பலவந்தமாக இழுக்கப்பட்டதால் "சங்கர்ஷணர்" என்று அழைக்கப்பட்டு, "ரமணம்" எனப்படும் உன்னத ஆனந்தத்தை தரவல்ல ஆன்மீக பலத்தை உடையவர் அவர். எனவே அனந்தர் தோன்றிய பிறகு அவர் சங்கர்ஷணர் என்றும் பலராமர் என்றும் அழைக்கப்பட்டார்.


"நாயம் ஆத்ம பல ஹினேனலப்ய" என்று உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. பலராமரின் போதிய உதவியின்றி ஒருவன் பரம்பொருளையோ வேறு எவ்விதமான ஆத்மானுபவத்தையோ பெற முடியாதென்பது இதன் கருத்து. பலம் என்றால் உடல் பலம் அல்ல. உடல் பலத்தால் யாரும் ஆத்ம பலம் பெற இயலாது. பலராமர் எனும் சங்கர்ஷணர் அளிக்கும் ஆத்மபலத்தின் உதவியால் தான் ஒருவன் ஆத்ம ஞானம் பெறவியலும். அனந்தர் எனும் சேஷர் எல்லாக் கிரகங்களையும் அவற்றின் நிலைகளில் நிலைபெற செய்துள்ளார். பௌதிக விஞ்ஞானம் இதை புவியீர்ப்பு சக்தி என்று அழைக்கிறது. உண்மையில் இது சங்கர்ஷணரின் பலத்தால் நிகழ்வதே. பலராமர் எனும் சங்கர்ஷணர் ஆன்மிக பலம் தரும் மூல ஆன்மீக குரு ஆவார். எனவே பலராமரின் அவதாரமான நித்தியானந்த பிரபு மூல ஆன்மீக குரு ஆவார். ஆன்மீக குரு முழுமுதற் கடவுளாகிய பலராமரின் பிரதிநிதி. அவரிடமிருந்து ஆன்மீக பலம் பெறப்படுகிறது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் "கிருஷ்ணா " புத்தகத்திலிருந்து ...

 

PostHeaderIcon ஶ்ரீ பலராமர்

 

PostHeaderIcon இன்றைய படம் 18-08-2016

 

PostHeaderIcon இன்றைய படம் 18-08-2016 - ஶ்ரீ பலராமர்

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 17 ஆகஸ்ட்

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 16 ஆகஸ்ட்

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 15 ஆகஸ்ட்

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 14 ஆகஸ்ட்

 

<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 7 - மொத்தம் 24 இல்

தேடுக...
இணைப்பில்
எங்களிடம் 28 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
பயனர் படிவம்